சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் சூர்யா பெற்றார்.
2020 ஆம் ஆண்டுக்காக அறிவிக்கப்பட்ட 68-வது தேசிய விருதுகள் தற்போது தில்லியில் வழங்கப்பட்டு வருகிறது.
இதில், சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டிருந்த சூர்யா இன்று தேசிய விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து பெற்றுக்கொண்டார். 'சூரரைப் போற்று' படத்தில் நடித்தற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், விருதுப் பட்டியலில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த தமிழ் படமாக 'சிவரஞ்சனியும் சில பெண்களும்' சார்பாக அப்படத்தின் இயக்குநர் வசந்த், சிறந்த இசையமைப்பாளராக ’அல வைக்குந்தபுரமுலோ’ படத்துக்காக தமன் மற்றும் சிறந்த பின்னணி இசைக்கான விருது 'சூரரைப் போற்று' படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது.
சிறந்த நடிகைக்காக விருது அபர்ணா பாலமுரளிக்கு வழங்கப்பட்டது.

மனைவி ஜோதிகாவுடன் நடிகர் சூர்யா
சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது சிவரஞ்சனியும் சில பெண்களும் படத்துக்காக ஸ்ரீகர் பிரசாத்துக்கும் சிறந்த துணை நடிகையாக அதே படத்தில் நடித்த லக்ஷ்மி பிரியா சந்திரமௌலிக்கும் வழங்கப்பட்டது. சிறந்த திரைக்கதைக்கான விருது சூரரைப் போற்று படத்துக்கும் சிறந்த வசனத்துக்காக மண்டேலா படத்துக்காக மடோனா அஸ்வினுக்கு கிடைத்துள்ளது.
சூரரைப் போற்று இயக்குநர் சுதா கொங்காரா சிறந்த திரைக்கதைக்கான விருதைப் பெற்றுக்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவானைக்காவலில் காரைக்கால் அம்மையாா் மாங்கனி திருவிழா

ஜூலை 1 முதல்.. பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் உயர்வு! மாணவர்கள் அதிர்ச்சி

அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு!

தங்கம் விலை அதிரடி குறைவு! வெள்ளி?
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |



