
நடிகர் ரஜினிகாந்தின் புதிய புகைப்படத்தை அவருடைய மகள் ஐஸ்வர்யா இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் காட்சிகள் சென்னை புறநகர் பகுதிகளான கிழக்கு கடற்கரை சாலை, எண்ணூரில் வேகமாக படமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விஜயதசமி நாளான இன்று ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா டிவிட்டரில், ‘இந்த முகம் ஒருபோதும் தவறான கோணத்தில் இருக்காது. நேர்மறையான விலைமதிப்பற்ற புகைப்படம். உங்கள் அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள்’ என ரஜினியின் புதிய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.