‘ஜீம் பூம் பா’ தொடர் லோகேஷ் ராஜேந்திரன் தற்கொலை

ஜீம் பூம் பா, மர்ம தேசம் உள்ளிட்ட தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான லோகேஷ் ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘ஜீம் பூம் பா’ தொடர் லோகேஷ் ராஜேந்திரன் தற்கொலை
Published on
Updated on
1 min read

ஜீம் பூம் பா, மர்ம தேசம் உள்ளிட்ட தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான லோகேஷ் ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1990 காலகட்டங்களில் வெளியாகி அனைவரது மனதிலும் இடம்பிடித்த தொடர்கள் மர்ம தேசம், விடாது கருப்பு, ஜீம் பூம் பா. இந்த தொடர்களில் ராசு என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக பிரபலமடைந்தவர் லோகேஷ்.

நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான கண்ணுபடப் போகுதய்யா படத்திலும் நடித்துள்ளார். மேலும், 6 அத்தியாயம் என்ற குறும்படத்தை இயக்கியுள்ள லோகேஷ், திரைப்படம் இயக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், திடீரென லோகேஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு, மர்ம தேசம் தொடர் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் நிகழ்ச்சியில் இயக்குநர், தயாரிப்பாளருடன் லோகேஷ் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com