''இது எனக்கு முன்னாடியே தெரியாது'': திவ்யா குறித்து உண்மைகளை போட்டுடைத்த செல்லம்மா நடிகர்

சின்னத்திரை நடிகை திவ்யாவின் குற்றச்சாட்டுகளுக்கு நடிகர் அர்ணவ் பதிலளித்துள்ளார். 
''இது எனக்கு முன்னாடியே தெரியாது'': திவ்யா குறித்து உண்மைகளை போட்டுடைத்த செல்லம்மா நடிகர்
Published on
Updated on
2 min read

சின்னத்திரை நடிகை திவ்யாவின் குற்றச்சாட்டுகளுக்கு நடிகர் அர்ணவ் பதிலளித்துள்ளார். 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மகராசி தொடரில் நடித்தவர் திவ்யா ஸ்ரீதர். தற்போது செவ்வந்தி என்ற தொடரில் நாயகியாக நடித்துவருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் சின்னத்திரை நடிகர் அர்ணவ்வை திருமணம் செய்துகொண்டதாக திருமண படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். 

தொடர்ச்சியாக இருவரும் ஒன்றாக  இருக்கும் படங்களை திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட வண்ணம் இருந்தார். இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

இந்த நிலையில் திடீரென அர்ணவ் மீது சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திவ்யா புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது 5 ஆண்டுகளாக காதலித்து வந்த தாங்கள் கடந்த ஜூலை மாதம் இந்து முறைப்படியும், முஸ்லீம் முறைப்படியும் திருணம் செய்துகொண்டாக கூறினார். 

தற்போது செல்லம்மா தொடரில் நாயகியாக நடிக்கும் அன்ஷித்தா என்பவருடன் அர்ணவ் நெருக்கமாக இருப்பதாக திவ்யா குற்றம் சாட்டினார். பலமுறை போனில் பேசும்போது அர்ணவ் தனது முன் ஐ லவ் யூ என்று கூறியதாக குறிப்பிட்டிருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதற்கு அர்ணவ், திருமண புகைப்படங்களை நீக்குமாறு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

தற்போது 3 மாத கர்ப்பமாக இருக்கும் திவ்யா செல்லம்மா சின்னத்திரை தொடர் படப்பிடிப்பு தளத்தில் அன்ஷித்தாவும் அர்ணவும் ஒன்றாக இருப்பது குறித்து கேட்டிருக்கிறார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அன்ஷிதா தன்னை பிடித்து தள்ளியதாகவும் இதனால் மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டதாகவும் திவ்யா தெரிவித்தார். 

இறுதியாக தான் அர்ணவுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாகவும், ஆனால் அத்தனை வழிகளையும் அர்ணவ் அடைத்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் அர்ணவ் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது, ''கடந்த 2017 ஆம் ஆண்டு திவ்யா தனது கணவருடன் இருந்தபோது என்னிடம் காதல் சொன்னார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பின்னர் நாங்கள் விவாகரத்து செய்யப்போகிறோம் என்றார்.

சரியாக 6 மாதங்களுக்கு பிறகு விவாகரத்து ஆகிவிட்டதாக என்னிடம் கூறினார். நாங்கள் காதலிக்க ஆரம்பித்தோம். ஆனால் கடந்த ஜனவரியில் தான் தன் கணவரை அவர் விவாகரத்து செய்திருக்கிறார். அவர் தன் குழந்தையை என்னிடம் அக்கா குழந்தை என்றே கூறி வந்தார். இந்த உண்மையும் எனக்கு சமீபத்தில் தான் தெரியவந்தது. 

நான் ரம்ஜான், பக்ரீத் சமயங்களில் ஊருக்கு கிளம்பும்போது, நீ சென்றால் இறந்துவிடுவேன் என திவ்யா மிரட்டினார். நல்ல பெண்தான். சில சமயங்களில் இப்படி நடந்துகொள்வார். தற்போது மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துவருகிறார். 

எனது பெற்றார் திருமணத்தை தள்ளி வைக்க சொன்னார்கள். ஆனால் உடனடியாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என திவ்யா பிடிவாதமாக இருந்தார். நான் கோவிலில் திருமணம் செய்துகொண்டது அவர்களுக்கு தெரியாது. தற்போது அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இவ்வாறு திவ்யா குறித்து அர்ணவ் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com