ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

திரைப்படமாகிறது நடராஜன் வாழ்க்கை: இவர்தான் ஹீரோ!

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரரான தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனின் வாழ்க்கை திரைப்படமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :12 அக்டோபர் 2022, 5:43 am

DIN

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரரான தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனின் வாழ்க்கை திரைப்படமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சேலம் சின்னப்பம்பட்டியில் பிறந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக விளையாடிவருபவர் நடராஜன்.

தற்போது, காயம் காரணமாக அணியில் இடம்பெறாமல் இருக்கிறார்.

இந்நிலையில், ஏழ்மையிலிருந்து ஐபிஎல், இந்திய அணி வரை உயர்ந்த நடராஜனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவுள்ளதாகவும் அவருடைய கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Story image

சில மாதங்களுக்கு முன் நடராஜனை சிவகார்த்திகேயன், சதீஷ், யோகி பாபு உள்ளிட்டோர் சந்தித்திருந்த நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, சிவகார்த்திகேயன் தயாரிப்பில் மகளிர் கிரிக்கெட்டை முன்வைத்து ‘கனா’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.