
நடிகர் எஸ்.ஜே.சூர்யா பிரின்ஸ் படம் குறித்த தனது கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தெலுங்கில் வெற்றிபெற்ற ஜிதி ரத்னாலு பட இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 21 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.
சமீபத்தில் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த நிலையில் இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பிரின்ஸ் டிரெய்லர் குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவில், ''நம் பிரின்ஸின்(சிவகார்த்திகேயன்) பிரின்ஸ் பட டிரெய்லர் மிகவும் கலகலப்பாக இருந்தது. சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துகள். தாமதமாக ட்வீட் செய்வதற்கு மன்னிக்கவும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், ''சார் நன்றி. எங்கள் எப்போ வாழ்த்தினாலும் மகிழ்ச்சி தான் சார்'' என்று தெரிவித்துள்ளார். பிரின்ஸ் படத்துடன் கார்த்தியின் சர்தார் படமும் வெளியாவதால் இரண்டு படங்களுக்கும் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா நடிக்க, சத்யராஜ், பிரேம்ஜி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.