சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

'பொன்னியின் செல்வன்' படத்துக்கு இதுவரை கிடைத்த வசூல் எவ்வளவு? லைக்கா அதிகாரப்பூர்வ தகவல்

பொன்னியின் செல்வன் படத்துக்க இதுவரை கிடைத்த வசூல் குறித்து லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

News image
Updated On :12 அக்டோபர் 2022, 10:55 am

பொன்னியின் செல்வன் படத்துக்க இதுவரை கிடைத்த வசூல் குறித்து லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

இருப்பினும் இந்தப் படம் உலக அளவில் வசூல் சாதனை படத்தை வருகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. 

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இதுவரை ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. தீபாவளி வரை வேறு எந்த படங்களும் வெளியாகததால் இந்தப் படத்தின் வசூல் ரூ.500 கோடியைத் தாண்டும் என்று திரையரங்க உரிமையாளர்களின் கணிப்பாக இருக்கிறது. 

இதனிடையே பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான பணிகளில் படக்குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டுவருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.