விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வாரிசு படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யை சந்தித்த பிரபலம் - சுவாரசியத் தகவல்

வாரிசு படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யை சந்தித்தது குறித்து பிரபலம் பகிர்ந்த தகவல் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :20 அக்டோபர் 2022, 5:49 am

வாரிசு படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யை சந்தித்தது குறித்து பிரபலம் பகிர்ந்த தகவல் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர் விஜய் வாரிசு படத்தில் நடித்துமுடித்துள்ளார். தற்போது பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுவருகின்றன. இந்த நிலையில் நடிகர் மனோபாலா நடிகர் விஜய்யை வாரிசு படப்பிடிப்பு தளத்தில் சந்தித்ததாக பகிர்ந்துள்ளார். 

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், ''தளபதி விஜய்யை வாரிசு படத்தின் செட்டில் பார்த்தேன். அவர் இப்பொழுதும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கிறார். மிகுந்த எனர்ஜியுடன் நடனமடுகிறார். 15 நிமிடங்கள் அவருடன் பேசினேன். அது எனக்கு புத்துணர்ச்சியும் எனர்ஜியும் அளித்தது'' என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, சரத்குமார், பிரபு, ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பொங்கலை முன்னிட்டு வாரிசு வெளியாகவிருக்கிறது. தீபாவளிக்கு முதல் பாடல் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.