தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சீனு ராமசாமியின் 'இடம் பொருள் ஏவல்' படத்துக்கு கிடைத்த முதல் விமர்சனம்

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் இணைந்து நடித்துள்ள இடம் பொருள் ஏவல் படத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.  

News image
Updated On :23 அக்டோபர் 2022, 11:24 am

DIN

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் இணைந்து நடித்துள்ள இடம் பொருள் ஏவல் படத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார். 

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் இணைந்து நடித்துள்ள படம் இடம் பொருள் ஏவல். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பாக லிங்குசாமி இந்தப் படத்தை தயாரித்திருந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டே வெளியாக வேண்டிய இந்தப் படம் பொருளாதார சிக்கல்கள் காரணமாக வெளியாகாமல் இருந்தது. 

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதன் பேரில் இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் வைரமுத்து முதன் முறையாக பாடல் எழுதியிருந்தார். இப்படத்தின் டிரெய்லர் நாளை (அக்டோபர் 23) மாலை 6 மணிக்கு வெளியாகிறது. 

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக இடம் பொருள் ஏவல் படத்தைப் பாராட்டி எழுதியுள்ளார். 

இதுகுறித்து அவர் எழுதியுள்ளதாவது, இயக்குனர் சீனு ராமசாமியின் 'இடம் பொருள் ஏவல்' திரைப்படத்தை சிறப்புக் காட்சியில் பார்த்தேன். இலக்கியத் தரம் மிக்க அற்புதமான ஆக்கம். பணத்தின் பின் ஓட்டமெடுக்கும் சமூகத்தின் கால்களை சற்று நிறுத்தி, மனிதர்களை, இயற்கையை, உண்மையை நேசிக்கச் சொல்கிறது இந்தக் கதை.

மார்க்சிய இயக்க தோழராக, செங்கொடி ஏந்தி நடித்திருக்கும் மறைந்த நடிகர் பூ ராமுவின் பாத்திரப் படைப்பு நெஞ்சங்களை நெகிழச் செய்கிறது. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்தக் கதைக்காக, இயக்குனர் சீனு ராமசாமியை அழைத்து, புத்தகம் வழங்கி பாராட்டினோம் என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.