

நடிகர் சூரி தனது குழந்தைகள், குடும்பத்தினருடன் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடிய விடியோ வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை இன்று (திங்கள்கிழமை) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. திரைப் பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | இரட்டைக் குழந்தைகளுடன் தீபாவளி வாழ்த்து சொன்ன நயன்தாரா! (விடியோ)
இந்த வரிசையில் நடிகர் சூரி தனது குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய விடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
லுங்கி கட்டிக்கொண்டு பட்டாசு வெடிப்பது, குழந்தைகள் அனைவரும் ஒவ்வொருவராக மேலே தொற்றிக் கொள்வது என சூரிக்கு இது மிகவும் சந்தோஷமான தீபாவளி என்பதை அவர் பதிவிட்டுள்ள விடியோ உணர்த்துகிறது.
விடியோ:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.