விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

'தெறி' படத்துக்கு பிறகு நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணைந்த பிரபலம்

தெறி படத்துக்கு பிறகு நடிகர் விஜய்யுடன் மீண்டம் இணைவது குறித்து பிரபலம் பகிர்ந்துள்ளார். 

News image
Updated On :25 அக்டோபர் 2022, 10:40 am

தெறி படத்துக்கு பிறகு நடிகர் விஜய்யுடன் மீண்டம் இணைவது குறித்து பிரபலம் பகிர்ந்துள்ளார். 

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. தீபாவளியை முன்னிட்டு வெளியான புதிய போஸ்டர் இதனை உறுதி செய்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

இதன் ஒரு பகுதியாக சண்டை பயிற்சி இயக்குநர் திலிப் சுப்புராயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாரிசு பட அனுபவம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், தெறி படத்துக்கு நடிகர் விஜய்யுடன் பணிபுரிந்துள்ளேன். இந்தப் படத்தில் ஜாலியான அதே நேரம் அதிரடியான சண்டைகாட்சிகள் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். 

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கியுள்ள வாரிசு திரைப்படம் குடும்ப சென்டிமென்ட்டை மையமாக வைத்து உருவாகியுள்ளது. தமன் இசையில் விஜய் பாடியுள்ள இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது.

வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, சரத்குமார், பிரபு, சங்கீதா, ஸ்ரீகாந்த், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.