தேவர் மகள்:  சிவாஜியாக கமல் , சக்திவேலாக அக்ஷரா ஹாசன் (புகைப்படம்)

தேவர் மகள்: சிவாஜியாக கமல் , சக்திவேலாக அக்ஷரா ஹாசன் (புகைப்படம்)

தேவர் மகன் பட போஸ்டரில் இருப்பது போல கமல்ஹாசன், அக்ஷரா ஹாசன் காட்சியளிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 
Published on

நடிகர் கமல்ஹாசன் எழுதி தயாரித்து நடித்த தேவர் மகன் வெளியாகி இன்றுடன் (அக்டோபர் 25) 30 ஆண்டுகளாகிறது. இன்றளவும் திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக தேவர் மகன் இருந்துவருகிறது. 

பெரிய தேவராக நடிகர் சிவாஜி கணேசனும், சக்தி வேலாக கமல்ஹாசனும் போட்டி போட்டு நடிப்பில் கலக்கியிருப்பார்கள். இளையராஜா, இயக்குநர் பரதன், பி.சி.ஸ்ரீராம் என இந்தியாவின் தலைசிறந்த கலைஞர்கள் உருவாக்கிய படம். 

தேவர் மகன் வெளியாகி 30 ஆண்டுகள் ஆனதையொட்டி திரை ரசிகர்கள் இந்தப் படத்தைக் கொண்டாடி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக தேவர் மகன் போஸ்டரை மறு உருவாக்கம் செய்யும் வகையில் புகைப்படம் ஒன்றை அக்ஷரா பகிர்ந்துள்ளார். 

அந்த படத்தில் சிவாஜியாக கமல் சேரில் கெத்தாக அமர்ந்து இருக்க, கமல் போல கைகட்டி பவ்வயமாக அருகில் இருக்கிறார் அக்ஷ்ரா. அவரது பதிவில் 'அவர் மகள்' என குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com