

நடிகர் சித்தார்த் இயக்குநர் மணிரத்னம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ஷங்கர் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்தார். 2019இல் அவரது அருவம் படம் வெளியானது. பின்னர் தமிழில் எதுவும் வெளியாகவில்லை. தெலுங்கில் 2021இல் மஹாசமுத்திரம் படம் வெளியானது. இந்தப் படத்தில் நடிகை அதிதி ராவ் ஹைதரி உடன் நடித்திருந்தார்.
அதிதி ராவ் ஹைதரி தமிழில் காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், ஹே சினாமிகா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். அவரது பிறந்தநாளுக்கு ரசிகர்களும் பலர் நடிகர் நடிகைகளும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் சித்தார்த் கூறிய வாழ்த்து செய்தி மட்டும் சமூக வலைதளங்களில் வைரலானது.
சித்தார்த்துக்கு பல நடிகைகளுடன் காதல் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தாலும் தற்போது அதிதி ராவுடன் காதல் இருப்பதாக அவரது இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. அந்த பதிவில் சித்தார்த், “இதய ராணிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! உங்களது சிறிய, பெரிய அனைத்து விதமான கனவுகளுக்குமாக கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்” என எழுதி இருவரும் ஒன்றாக எடுத்த புகைப்படத்தினை பதிவிட்டு இருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.