பிரபல நகைச்சுவை நடிகர் திருமணத்தில் சிவகார்த்திகேயன்!
பிரபல நகைச்சுவை நடிகர் விக்னேஷ் காந்தின் திருமணத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை 28, நட்பே துணை, மீசையை முறுக்கு, மெகந்தி சர்கஸ், நெஞ்சமுண்டு நேர்மை உண்டு, தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலாமானவர் விக்னேஷ். சில பாடல்களையும் எழுதியுள்ள இவர், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருக்கிறார்.
இந்நிலையில், விக்னேஷுக்கும் ராஜாத்தி என்ற பெண்ணிற்கும் சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்தம் செய்யப்பட்ட நிலையில், திருச்சி வயலூர் முருகன் கோயிலில் விக்னேஷ் - ராஜாத்தி திருமணம் நேற்று காலை நடைபெற்றது.
இதையும் படிக்க | பிரபல இசையமைப்பாளர், பாடகர் பூபேன் ஹஸாரிகாவை கௌரவித்த கூகுள்!
இந்த திருமணத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து, திரைத்துறையினரும், ரசிகர்களும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.