

தளபதி 67 படத்தில் வில்லனாக நடிக்க பிரபல ஹிந்தி நடிகர் ஒப்பந்தமாகியுள்ளதாக ததகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துவருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க, சரத்குமார், குஷ்பு, பிரபு, ஸ்ரீகாந்த், ஷாம், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் பாடல் காட்சி விடியோ சமூக வலைதளங்களில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியால் வாரிசு படத்தை விட லோகேஷ் இயக்கவிருக்கும் தளபதி 67 படத்தின் மீது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமுள்ளது. இந்தப் படம் குறித்து நாளுக்கு நாள் பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கின்றன.
இந்தப் படத்தில் திரிஷா, சமந்தா என இரு கதாநாயகிகள் நடிக்கவிருப்பதாக வெளியான தகவலையும், ஃபகத் ஃபாசில் நடிக்கவிருப்பதாக வெளியான தகவலையும் ஏற்கனவே கேள்விப்பட்டிருப்போம்.
அந்த வகையில் தற்போது இந்தப் படத்தில் வில்லனாக ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் நடிக்கவிருக்கிறாராம். இதற்காக தயாரிப்பு தரப்பிடம் சம்பளமாக ரூ.10 கோடி வரை கேட்டுள்ளாராம். விரைவில் அவர் நடிப்பது உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாத இறுதியில் துவங்கவிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.