கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

'என்னால முடியாது’ விக்ரம் அழைப்பை நிராகரித்த கார்த்தி

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக நடிகர் விக்ரம் வைத்த கோரிக்கையை கார்த்தி மறுத்துள்ளார்.

News image
Updated On :14 செப்டம்பர் 2022, 8:43 am

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக நடிகர் விக்ரம் வைத்த கோரிக்கையை கார்த்தி மறுத்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வருகிற 30 ஆம் தேதி வெளியாகும் நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் முயற்சிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுவருகின்றனர். 

முன்னதாக,  பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.  

இந்த நிலையில் , படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ள விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில்  ''சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா?குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான். என்ன நண்பா, வருவாய் தானே? அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா!'' என்று நடிகர் கார்த்தியை  குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.

அதற்கு நடிகர் கார்த்தி,  “இளவரசே உங்களுக்காக தஞ்சை முதல் லங்கை வரை சென்ற களைப்பே இன்னும் போகவில்லை. எனக்கு காய்ச்சல் அதனால் வரமுடியாது. விடியோ காலில் இளவரசியிடம் பேசி மன்னிப்புக் கேட்கிறேன். தயவு செய்து என்னை மன்னியுங்கள்” என நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.

பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனாக கார்த்தியும் அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், குந்தவையாக திரிஷாவும் நடித்துள்ளனர். இதில் விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா ஆகியோர் சகோதர, சகோதரிகளாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.