
ஆன்மிகம் குறித்த கேள்விகளுக்கு நடிகர் சிம்பு பதிலளித்துள்ளார்.
விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடைமையடா வெற்றிகளுக்குப் பிறகு 3-வது முறையாக இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான ‘வெந்து தணிந்தது காடு’ நேற்று திரையரங்குகளில் வெளியானது.
வெளியான நாள் முதலே படத்தின் வெற்றி குறித்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வருகின்றன.
இதையும் பார்க்க: ’வெந்து தணிந்தது காடு’ குறித்து நடிகர் சூர்யா டிவிட்!
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் நடிகர் சிம்புவிடம் ஆன்மிகம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் ‘கரோனா ஊரடங்கின்போது அனைவரும் வீட்டிலிருந்தார்கள். நான் வெளியே சென்று உடம்பைக் குறைக்கும் வேலைகளில் ஈடுபட்டேன். அதேநேரம் ஆன்மிகத்தில் கவனத்தைச் செலுத்தியதும் ’லிவ்விங் வித் ஹிமாலயன் மாஸ்டர்ஸ்’(living with the himalayan masters) போன்ற புத்தகங்களைப் படித்தேன். ஒருவர் இறக்கிறார் என்றால் நாம் வேதனைப்படுகிறோம். ஆனால், அது இயற்கைக்குத் தேவையான ஒன்று. நல்லதோ கெட்டதோ நடக்கும் எல்லாவற்றுக்கும் எதோ ஒரு காரணம் இருக்கும் என்பதைத்தான் இன்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.