தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கமல்ஹாசன்! வைரலாகும் புகைப்படம்

‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசன் இன்று இணைந்துள்ளார்.

News image
Updated On :22 செப்டம்பர் 2022, 1:24 pm

DIN

‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசன் இன்று இணைந்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து, கரோனா கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

இயக்குநர் ஷங்கருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஏற்பட்டிருந்த பிரச்னை சரியானதை தொடர்ந்து கடந்த மாதம் படப்பிடிப்பிற்கான பூஜை போடப்பட்டது.

Story image

நடிகர் கமல்ஹாசன் வெளிநாட்டில் இருந்த காரணத்தால், கமல் இல்லாத காட்சிகள் ஒரு மாதமாக படமாக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து திரும்பியுள்ள கமல், இன்று படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார். இயக்குநர் ஷங்கருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ‘இன்றுமுதல்’ என்று டிவிட்டரில் கமல் பதிவிட்டுள்ளார்.

Story image

தற்போது நடிகர் கமலுடன், இயக்குநர் ஷங்கர் இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.