

'பீஸ்ட்' படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த கேலக்ஸி திரையரங்கம் பீஸ்ட் படக் கதையை பகிர்ந்துள்ளது.
அதில் நகரின் பரபரப்பான பகுதியை தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகின்றனர். தீவரவாத அமைப்பின் தலைவரை விடுவிக்கக்கோரி இந்திய அரசுக்கு மிரட்டல் விடுக்கின்றனர்.
இந்த நிலையில் தீவிரவாதிகளை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்பிரிவின் தலைவருக்கு, தீவிரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட பகுதியில் முன்னால் ராணுவ அதிகாரி இருப்பது தெரியவருகிறது. இதனையடுத்து தீவிரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டவர்களை மீட்க, ராணுவத்தினர் அவரது உதவியை நாடுகின்றனர்.
இதையும் படிக்க | அடுத்த படத்துக்கும் யுவன்தான் இசையா? : அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதனையடுத்து முன்னாள் வீரர் தீவிரவாதிகளுக்கு எதிராக செயல்படத் துவங்குகிறார். அதன் ஒரு பகுதியாக தீவிரவாத அமைப்பின் தலவைரை அரசு விடுவிக்க சம்மதிக்கிறது. இந்த நிலையில் துரிதமாக செயல்பட்டு தீவிரவாதிகளிடமிருந்து சிறை பிடிக்கப்பட்டவர்களை மீட்டு, தீவிரவாதிகளை முன்னாள் ராணுவ வீரர் கொல்கிறார். என்று குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.