
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
தமிழ் பதிப்பின் டிரெய்லர் ஏற்கனவே கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியான நிலையில் இந்தப் படத்தின் ஹிந்தி டிரெய்லர் இன்று மாலையும், தெலுங்கு டிரெய்லர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ''நீங்கள் எங்களைப் பார்ப்பது....'' மாமனார் குறித்து பகிர்ந்த விக்னேஷ் சிவன்
இந்த நிலையில் பீஸ்ட் பட ஹிந்தி டிரெய்லரை ஹிந்தி நடிகர் வருண் தவான் வெளியிடுகிறார். மேலும் இன்று மாலை 4 மணிக்கு அரபிக் குத்து பாடலின் தெலுங்கு மற்றும் ஹிந்தி பதிப்பு வெளியாகவுள்ளது.
பீஸ்ட் படத்துடன் கேஜிஎஃப் படம் வெளியாகவுள்ளதால் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பீஸ்ட் பாடல்கள் இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கேஜிஎஃப் முதல் பாகத்தின் வெற்றி காரணமாக, கேஜிஎஃப் 2 படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
#BeastHindiTrailer will be released by the Young & Dynamic Star @Varun_dvn Today at 6 PM@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @KiranDrk @anbariv @UFOMoviez #BeastModeON #BeastMovie #Beast pic.twitter.com/z2taQcFHYW
— Sun Pictures (@sunpictures) April 4, 2022