இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இசைக் கூட்டணியில் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாமனிதன்' படத்தின் டிரைலர் வெளியானது.
'தர்மதுரை' பட வெற்றிக்கு பிறகு இயக்குநர் சீனு ராமசாமி - விஜய் சேதுபதி இணைந்துள்ள 'மாமனிதன்' படத்தை யுவன் ஷங்கர் ராஜா தனது ஒய்எஸ்ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பாக தயாரித்துள்ளார். இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர்.
இதையும் படிக்க | தமிழ் சினிமாவில் களமிறங்கும் மற்றொரு நயன்தாரா
ஏற்கெனவே இந்தத் திரைப்படத்தின் டீசர் வெளியான நிலையில் தற்போது டிரைலர் வெளியாகியுள்ளது. மாமனிதன் திரைப்படம் மே 20ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.