நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

'ராக்கி பாய் சத்தம்போடுறத நிறுத்த மாட்டாரு': 'கேஜிஎஃப்' படம் பார்த்து தூங்கிய மகன்: நடிகை பகிர்ந்த சுவாரசியத் தகவல்

தனது மகனின் முதல் திரையரங்க அனுபவங்களை நடிகை மியா ஜார்ஜ் பகிர்ந்துகொண்டார். 

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 7:38 am

DIN

'அமர காவியம்', 'இன்று நேற்று நாளை', 'ஒருநாள் கூத்து', 'வெற்றிவேல்', 'எமன்' உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் மியா ஜார்ஜ். தற்போது விக்ரமின் கோப்ரா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

கடந்த 2020 ஆம் ஆண்டு மியாவுக்கு திருமணம் நடைபெற்றது. தற்போது அவருக்கு லூகா என்ற ஆண் குழந்தையுள்ளது. இந்த நிலையில் மியா ஜார்ஜ் தனது மகனின் முதல் திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். 

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது எழுதிய பதிவில், லுாகாவின் முதல் திரையரங்க அனுபவம். கேஜிஎஃப் 2. இந்தப் படம் அதிக விஎஃப்எக்ஸ் மற்றும் சத்தம் நிறைந்த படம் என்பதால் முதலில் தயங்கினோம்.

எங்களால் மற்ற பார்வையாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக போதிய முன்னெச்சரிக்கையுடன்  இரண்டாவது காட்சிக்கு சென்றோம். 

முதலிலேயே  எனது மகனுக்கு உணவளித்துவிட்டேன். அவனுக்கு ஏற்ற உடையை அணிவித்தேன். குளுமையான சூழ்நிலை இருக்கும்படி பார்த்துக்கொண்டேன். அது நன்றாக கைகொடுத்தது. திரையில் என்ன நடக்கிறது என அவன் ஆச்சரியமாக பார்த்தான். பிறகு 10 நிமிடங்களில் ராக்கி பாய் சத்தம்போடுவதை நிறுத்தமாட்டார் என தூங்கிவிட்டான். எங்கள் முதல் அனுபவம் சிறப்பாக இருந்தது'' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.