
நடிகர் விஜய் சேதுபதி நடித்த 'மாமனிதன்' திரைப்படம் முதலில் மே 6 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விஜய் சேதுபதியின் மற்றொருபடமான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படம் வருகிற ஏப்ரல் 28 வெளியாவதால், ஒருவார இடைவேளையில் விஜய் சேதுபதியின் படங்கள் வெளியானால் வசூல் பாதிக்கும் என்பதால் மாமனிதன் படம் மே 20 ஆம் தேதிக்கு தள்ளி வகைக்கப்பட்டது.
இந்த நிலையில் 'மாமனிதன்' படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்கள் வெளியாவதால் மாமனிதன் திரைப்படத்தின் வெளியீடு மே 20 ஆம் தேதியிலிருந்து ஜூன் 24 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.
இதையும் படிக்க | 'ராக்கி பாய் சத்தம்போடுறத நிறுத்த மாட்டாரு': 'கேஜிஎஃப்' படம் பார்த்து தூங்கிய மகன்: நடிகை பகிர்ந்த சுவாரசியத் தகவல்
'மாமனிதன்' திரைப்படம் தமிழ் நாட்டில் 400 திரையரங்குகளிலாவது வெளியாகவேண்டும். திரையரங்க உரிமையாளர்களிடமும், விநியோகிஸ்தர்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாமனிதன்' படத்துக்கு இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
Due to continue @VijaySethuOffl movie releases studio9 have changed the release date of mamanithan from may 20 th to June 24 . Mamanithan deserves to hold minimum 400 theatres all over tamilnadu . Our sincere apologies to all theatre owners and distributor. @seenuramasamy pic.twitter.com/3iYeRmmHKk
— RK SURESH (@studio9_suresh) April 21, 2022