'தளபதி 66' படத்தில் பிரபல நடிகர் ஷாம் விஜய்யின் அண்ணனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தற்போது தெலுங்கு வம்சி இயக்கத்தில் 'தளபதி 66' படத்தில் நடித்துவருகிறார். பீஸ்ட் படம் ரசிகர்களைப் பெரிதும் கவரவில்லை என்பதால் அவரது ரசிகர்கள் தளபதி 66 படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நடிகர் விஜய்யுடன் நாயகி ராஷ்மிகா இருக்கும் புகைப்படங்கள் வரைலானது. தற்போது இந்தப் படத்தின் பாடல் படமாக்கப்பட்டது.
இதனையடுத்து ராமோஜி ஃபிலிம் சிட்டியில் முக்கிய காட்சிகள் படமாக்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக பிரம்மாண்டமான வீடு ஒன்றின் செட் உருவாக்கப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க | நடிகர் சக்கரவர்த்தி மரணம் - பிரபலங்கள் இரங்கல்
இந்தப் படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிகர் மோகன் நடிக்கவிருப்பதாக தகவல் பரவியது. இந்த நிலையில் நடிகர் ஷாம் இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு அண்ணனாக நடிக்கிறாராம். நடிகர் ஷாம்' குஷி' படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்தில் நடிகர் விஜய்யின் நண்பராக சில காட்சிகளில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி 66 திரைப்படம் பூவே உனக்காக போல குடும்ப திரைப்படமாக இருக்கும் என தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்தார். இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐரோப்பாவில் கடும் வெய்யில்! பிரான்ஸில் 40 பேர் பலி!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



