1980களில் பிரபலமாக இருந்த பிரபல நடிகர் சக்கரவர்த்தி மாரடைப்பால் இன்று மரணமடைந்தார்.
தமிழ் திரையுலகில் சிவாஜி, ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சக்ரவர்த்தி. அவர் இன்று (ஏப்ரல் 23) காலை மும்பையில் காலமானார். அவருக்கு வயது 62.
கடந்த 1970 மற்றும் 80களில் ஏராளமான தமிழ் படங்களில் சக்ரவர்த்தி நடித்துள்ளார். இதுவரை 80 திரைப்படங்களல் அவர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

சினிமாவிலிருந்து விலகிய சக்கரவர்த்தி மும்பையில் குடும்பத்துடன் வசித்துவந்தார். தனியார் தொலைக்காட்சியில் பின்னணி குரல் கொடுக்கும் கலைஞராக அவர் இருந்துவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சக்கரவர்த்திக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சக்கரவர்த்தியின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆளும்கட்சி மிரட்டலுக்கு அஞ்சும் இயக்கம் திமுக அல்ல: மு.க. ஸ்டாலின்

அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!

முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு சமூக நீதி வணக்கம்! முதல்வர் விஜய்

வெனிசுவேலாவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! கட்டடங்கள் சேதம்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



