வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஹிந்தி சூரரைப் போற்று படப்பிடிப்பு தொடங்கியது: கதாநாயகன், கதாநாயகி யார்?

சூர்யா, ஜோதிகாவின் 2டி நிறுவனம் இப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகிறது. 

News image
Updated On :25 ஏப்ரல் 2022, 9:47 am

DIN

சூர்யா நடிப்பில் இறுதிச்சுற்று சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவான சூரரைப் போற்று படம் 2020-ம் ஆண்டில் தீபாவளிக்கு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. சூரரைப் போற்று, சூர்யாவின் 38-வது படம். கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடித்தார். இசை - ஜி.வி. பிரகாஷ். ஒளிப்பதிவு - நிகேத் பொம்மிரெட்டி.ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் சுயசரிதையான சிம்ப்ளி ஃப்ளையைத் தழுவி எடுக்கப்பட்டது. திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியானதால் பல்வேறு விமர்சனங்களை சூர்யா எதிர்கொண்டார். சூரரைப் போற்று படம் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் ஹிந்தியில் உடான் என்கிற பெயரில் டப் செய்யப்பட்டு ஓடிடியில் வெளியானது.

சூரரைப் போற்று படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. தமிழில் இப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா, ஹிந்தியிலும் இயக்குகிறார். சூர்யா, ஜோதிகா, பாலிவுட் தயாரிப்பாளர் விக்ரம் மல்ஹோத்ரா ஆகியோர் இணைந்து ஹிந்தி ரீமேக்கைத் தயாரிக்கிறார்கள். 

இந்நிலையில் சூர்யாவின் கதாபாத்திரத்தை ஹிந்தியில் அக்‌ஷர் குமார் ஏற்று நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் அக்‌ஷர் குமார், ராதிகா மதன் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. சூர்யா, ஜோதிகாவின் 2டி நிறுவனம் இப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகிறது. 

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.