தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும்: கங்கனா

இந்தியாவின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்தியாவின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

கங்கனா ரணாவத் நடித்துள்ள தாகட் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய கங்கனா, நாட்டின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:

"நாட்டின் தேசிய மொழியாக ஹிந்தியை ஏற்க முடியாது எனக் கூறுபவர்கள் அரசியலமைப்பை மறுக்கிறார்கள் என்று அர்த்தம்.

இந்தியாவின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்கலாம். தமிழ் மற்றும் ஹிந்தி உள்பட அனைத்து மொழிகளுக்குமே மூத்த மொழி சமஸ்கிருதம்தான்.

பல்வேறு மொழிகள் மற்றும் கலாசாரங்கள் அடங்கிய பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா. தங்களது மொழி மற்றும் கலாசாரம் குறித்து பெருமைகொள்வது அனைவருக்குமான பிறப்புரிமை. நான் பஹாரி என்பதில் பெருமை கொள்கிறேன்" என்றார் அவர்.

முன்னதாக, தேசிய மொழி குறித்து பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் கன்னட நடிகர் கிச்சா சுதீப் ஆகியோர் இடையே ட்விட்டர் பக்கத்தில் கருத்துப் பரிமாற்றம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com