உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

தொடர்ந்து பொன்னியின் செல்வன் நிகழ்வுகளைப் புறக்கணிக்கும் விக்ரம் - காரணம் இதுவா ?

நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் நிகழ்வுகளை தொடர்ந்து புறக்கணித்துவருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.  

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:28 pm IST

நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் நிகழ்வுகளைத் தொடர்ந்து புறக்கணித்துவருவதாக சர்ச்சை எழுந்துள்ளது. 

இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகங்கள் கொண்ட படமாக இயக்கிவருகிறார். இதில் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. 

இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆனால் இந்த நிகழ்வில் உடல் நலக் குறைவு காரணமாக நடிகர் விக்ரம் பங்கேற்கவில்லை. தனியார் மருத்துவமனையில் விக்ரம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். 

Story image

அடுத்த இரண்டு நாட்களிலேயே கோப்ரா இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் முன் தோன்றி பேசினார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற பொன்னி நதி பாடல் வெளியீட்டு விழாவிலும் நடிகர் விக்ரம் கலந்துகொள்ளவில்லை.

ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். இது பெரும் சர்ச்சையை ஏறப்டுத்தியது. இதே நேரத்தில் இயக்குநர் கௌதம் மேனனை சந்தித்து துருவ நட்சத்திரம் படம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இயக்குநர் கௌதம் மேனன், விக்ரமுடன் இருக்கும் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். 

Story image

பொன்னியின் செல்வன் நிகழ்வுகளை நடிகர் விக்ரம் தொடர்ந்து புறக்கணிப்பதற்கு காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளன. பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள விக்ரம் வரும் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளனவாம். இதனால் நடிகர் விக்ரம் இயக்குநர் மணிரத்னத்தின் மீது கடும் அதிருப்தியில் உள்ளாராம். 

இதுதான் காரணமா? அல்லது வேறு தனிப்பட்ட காரணங்கள் இருக்கின்றனவா என்பது விரைவில் தெரியவரும்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.