தயாரிப்பாளர்கள் மீதான வருமான வரி சோதனை - கார்த்தி கருத்து

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவது குறித்து நடிகர் கார்த்தி கருத்து தெரிவித்துள்ளார். 
தயாரிப்பாளர்கள் மீதான வருமான வரி சோதனை - கார்த்தி கருத்து

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவது குறித்து நடிகர் கார்த்தி கருத்து தெரிவித்துள்ளார். 

திரைப்பட தயாரிப்பாளர்கள் தாணு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா, அன்பு செழியன் உள்ளிட்ட தயாரிப்பாளர்களின் வீடு அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த விவகாரம் திரையுலகினரிடையே மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் மதுரையில் விருமன் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் சூர்யா, கார்த்தி, இயக்குநர் பாரதிராஜா, ஷங்கர், யுவன் ஷங்கர் ராஜா, இயக்குநர் முத்தையா, இளவரசு, சிங்கம் புலி, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். 

இந்த நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களை நடிகர் கார்த்தி சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''விருமன் பட விழா திருவிழா போல உள்ளது. மதுரை சார்ந்த படத்தின் இசை வெளியீடு மதுரையில் நடப்பதுதான் சிறப்பு. கடைக்குட்டி சிங்கம் படத்துக்கு பிறகு கிராமத்துக்கதையில் நடித்துள்ளேன்'' என்று பேசினார். 

அப்போது தயாரிப்பாளர்கள் இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது குறித்து நடிகர் கார்த்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த கார்த்தி, ''வருமானத்துறை சோதனை நடைபெறுவது இயல்பான ஒன்றுதான். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பதுதான். இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. சினிமாத்துறையினர் மீதான வருமான வரித்துறை சோதனை மட்டும் பெரிய செய்தியாகிவிடுகிறது'' என்று பதிலளித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com