இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தில் ஆவணப்படுத்தப்பட்ட விடியோவின் டீசரை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான் என இந்திய பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
திருமணம் முடிந்து சில நாள்கள் கழித்து திருமண புகைப்படங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
ஆனால், இந்தத் திருமணத்தை ஆவணப்படுத்தி அதன் ஒளிபரப்பு உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றிருந்ததால் அதிகாரப்பூர்வமாக அந்நிகழ்வின் விடியோக்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில், விக்கி - நயன் திருமணத்தின் ஆவணப்படுத்தப்பட்ட விடியோவை பியாண்ட் தி ஃபேரி டேல்(beyond the fairy tale) என்கிற பெயரில் நெட்ஃபிளிக்ஸ் விரைவில் வெளியிட உள்ளதால் தற்போது அந்த விடியோவின் டீசரை வெளியிட்டுள்ளனர்.
ஒளிபரப்பு உரிமையை ரூ.25 கோடிக்கு வாங்கியதுடன் திருமண ஏற்பாடுகளையும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனமே நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட்.. ஆடைக்கட்டுப்பாட்டில் புதிய மாற்றம்!
குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்!

தாத்தாவான துணை முதல்வர் டி.கே. சிவகுமார்: தேஜஸ்வி சூர்யா வாழ்த்து!

ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


