நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யா விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார்.
வாலி படத்தின் மூலம் 1999ஆம் ஆண்டு இயக்குநராக அறிமுகமான எஸ்.ஜே. சூர்யா, நியூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் அடியெடுத்து வைத்தார்.
வாலி, குஷி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, நியூ, அன்பே ஆருயிரே போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான இறைவி திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஏராளமான வாய்ப்புகள் குவிந்தன. தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான மாநாடு, டான் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது நாயகனாக அவர் நடித்துள்ள 'கடமையை செய்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
எஸ்.ஜே.சூர்யா நடிகையை காதலிப்பதாக அவ்வபோது வந்தந்திகள் வந்தாலும், அதனை அவர் தொடர்ந்து மறுத்து வருகிறார். இந்நிலையில், 54 வயதாகும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு அவரது குடும்பத்தார் பெண் பார்த்து வருகின்றனர்.
எனினும் மணப்பெண் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உ.பி.: அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்!

சால்மன் மீன்கள் சென்னையில் கிடைக்குமா? தமிழ்ப் பெயர் இதுவா?

அரசியலுக்கு வருவது எப்போது? 2013-ல் நடிகர் விஜய்யின் பதில்!

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தத்தை பாதிக்கிறதா?
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



