சென்னையில் மேகவெடிப்பு: தொடரும் கனமழை - வெள்ளக்காடான சாலைகள்! கோவாவில் டிசம்பர் 16-இல் ஐபிஎல் ஏலம்! எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த நவ. 1 முதல் தடை! மத்திய அரசு உத்தரவு தில்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு! சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சாமி தரிசனம் எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

'' மறக்க முடியாத படமா இருக்கணும்'' - நெல்சனுக்கு பிரபல இயக்குநர் வாழ்த்து

மறக்க முடியாத படமாக கொடுங்கள் என நெல்சனுக்கு பிரபல இயக்குநர் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Updated On :

மறக்க முடியாத படமாக கொடுங்கள் என நெல்சனுக்கு பிரபல இயக்குநர் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நேற்று(ஆகஸ்ட் 22) துவங்கி நடைபெற்றுவருகிறது. முதலில் சண்டைக்காட்சியுடன் இந்தப் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக தெரிகிறது. ஸ்டண்ட் சிவா இந்தப் படத்தின் சண்டைக்காட்சியை வடிவமைத்துள்ளார். 

பேட்ட, தர்பார் படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக ரஜினிகாந்த்துடன் அனிருத் கைகோர்த்துள்ளார். நெல்சன் படங்களில் பாடல்கள் பெரிய வெற்றிபெற்றுவருவதால் இந்தப் படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Story image

சில மாதங்களுக்கு முன் பீஸ்ட் தோல்வியால் ரஜினிகாந்த் - நெல்சன் படம் கைவிடப்படுவதாக தகவல் பரவியது. இதனை மறுக்கும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெயிலர் பட அறிவிப்பு புகைப்படத்தை மாற்றினார். இதனையடுத்து ஜெயிலர் படத்தை வெற்றிப்படமாக கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் நெல்சன் இருக்கிறார். 

இந்த நிலையில் அவரது நண்பரும் பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவன், வாழ்த்துகள் நெல்சன். உன்னை நினைத்து பெருமையாக இருக்கிறது. இது உனது சிறந்த படமாக இருக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். 

உனது கற்பனைத்திறன் மற்றும் படைப்பாற்றலைக் கொண்டு நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து மறக்க முடியாத படமாக கொடு'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.