
நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தின் பாடல் காட்சிகள் இணையத்தில் வெளியானது படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
'வாரிசு' படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க, ஸ்ரீகாந்த், சரத்குமார், குஷ்பு, சங்கீதா, பிரபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பாக தில் ராஜு இந்தப் படத்தை தயாரிக்கிறார். குடும்ப சென்டிமென்ட் நிறைந்த படமாக வாரிசு படம் உருவாகி வருகிறது.
இதையும் படிக்க | ரஜினியின் ஜெயிலரில் நடிக்கும் நடிகர்கள் - சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ தகவல்
விஜய்யின் 'வாரிசு' படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகி தயாரிப்பு தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் பாடல் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளன. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஏற்கெனவே இந்த மாதத்தில் மட்டும் 3 முறை வாரிசு படப்பிடிப்புத் தள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளதாக கூறப்பட்டு வந்தநிலையில் படக்குழுவினருக்கு தயாரிப்பு தரப்பு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.