
நடிகர் விஷால் நடிக்கும் ‘மார்க் ஆண்டனி' படத்தின் முதல் பார்வை போஸ்டர் (பர்ஸ்ட் லுக் போஸ்டர்) நாளை வெளியாகுமென அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஷால் தற்போது நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா தயாரிக்கும் லத்தி படத்தில் நடித்துவருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை வினோத் குமார் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில் விஷால் நடிக்கும் புதிய படமான ‘மார்க் ஆண்டனி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் நாளை காலை 11 மணி 11 நிமிடத்திற்கு வெளியாகுமென அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, ரிது வர்மா நடிக்க இருப்பதாக தெரிகிறது. ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
#MarkAntony First Look on Mark Antony’s Birthday@VishalKOfficial @iam_SJSuryah @vinod_offl @gvprakash @riturv
— Vishal Film Factory (@VffVishal) August 28, 2022
see you tomorrow at 11:11 am pic.twitter.com/w8W28wjRFZ