கைகலப்பில் முடிந்த பிக் பாஸ் ‘டாஸ்க்’: மயங்கி விழுந்த அஷீம்!

கைகலப்பில் முடிந்த பிக் பாஸ் ‘டாஸ்க்’: மயங்கி விழுந்த அஷீம்!

பிக் பாஸ் போட்டியில் கொடுக்கப்பட்ட டாஸ்க் கைகலப்பில் முடிவடைந்தது பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Published on

பிக் பாஸ் போட்டியில் கொடுக்கப்பட்ட டாஸ்க் கைகலப்பில் முடிவடைந்தது பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 போட்டி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, விக்ரமன், ஆயிஷா, அமுதவாணன், பாடகர் ஏடிகே, மைனா நந்தினி, ஜனனி, அஷீம், தனலட்சுமி, கதிரவன், மகேஸ்வரி, மணிகண்டா, குயின்ஸி, ராம், சிவின், நிவாசினி, செரினா, அசல், சாந்தி, ஜி.பி.முத்து 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியை நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து 6வது முறையாக தொகுத்து வழங்கி வருகிறார்.

இதுவரை 7 வாரங்களை கடந்துள்ள நிலையில், சாந்தி, அசல், செரினா, மகேஸ்வரி, நிவாசினி, ராபர்ட் ஆகியோர் நானிமேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜி.பி. முத்து தனிப்பட்ட காரணங்களால் தானாகவே போட்டியைவிட்டு விலகினார்.

இந்நிலையில், ஏலியன் - பழங்குடி மக்கள் டாஸ்க் 8வது வாரத்திற்கான டாஸ்க்காக கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பழங்குடியின மக்களாக அசீம், ஷிவின், விக்ரமன், ஏடிகே, ராம், கதிரவன், மைனா ஆகியோர் முதல் நாள் இருந்தனர். ஏலியன்களாக தனலட்சுமி, குயின்ஸி, ஜனனி, அமுதவாணன், ரச்சிதா, ஆயிஷா, மணிகண்டா ஆகியோர் இருந்தனர். அடுத்தடுத்த நாள்களில் போட்டியாளர்கள் இடம் மாறக்கூடும்

இதில், பழங்குடியின மக்களின் கற்களை ஏலியன்களும், ஏலியன்களிடம் இருக்கு பூக்களை பழங்குடியினரும் திருட வேண்டும். இந்த டாஸ்க் தொடங்கியது முதலே பல பிரச்னைகளும், வாக்குவாதங்களும் போட்டியாளர்களுக்கு இடையே ஏற்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இன்றைய ப்ரோமோவில் அமுதவாணனுக்கும் அஷீமுக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது. இதில், தைரியம் இருந்தால் என் மேல் கை வைத்து பார் என்று அமுதவாணனின் முகத்தின் மேல் கைவைத்து அஷீம் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து, அஷீமின் செயலுக்கு அனைத்து போட்டியாளர்களும் கடுமையான கண்டனத்தை பதிவு செய்த நிலையில், அஷீம் வீட்டின் கார்டன் பகுதிக்கு சென்று அமர்ந்திருந்தார்.

அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்ட சக போட்டியாளர்கள் மருத்துவ அறைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனைக்கு பின் மீண்டும் அஷீம் போட்டியில் இணைந்து கொண்டார்.

அதிக கோபம் காரணமாக ரத்த அழுத்தம் ஏற்பட்டதாகவும், நீண்ட நேரம் சாப்பிடாததன் காரணமாகவும் அவர் மயங்கி விழுந்திருக்கக் கூடும் எனத் தகவல் பரவியுள்ளது.

தொடர்ந்து, ஏலியன் - பழங்குடி மக்கள் டாஸ்க் நடைபெற்று வருவதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் பார்வையாளர்கள் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com