பி.டி. அரசகுமார் மீதான குண்டர் சட்டம் ரத்து! மதுரையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் தொடக்கிவைத்தார்!மதுரையில் முதல்வர் விஜய் சாலைவலம்!ஒரு ஓட்டில் தோல்வி: திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் மனு நிராகரிப்பு ஹரியாணாவில் 250 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி பலி!செஸ் ஒலிம்பியாட்: பதக்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

‘ப்ளூசட்டை’ விமர்சனத்திற்காக காத்திருக்கிறேன்: கோல்டு இயக்குநர்

‘கோல்டு’ படத்தின் விமர்சனத்திற்காக தான் காத்திருப்பதாக அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார். 

Published On :

'நேரம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அவர் இயக்கிய மலையாள படமான 'பிரேமம்' தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு அல்போன்ஸ் இயக்கிய 'கோல்டு' படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா, செம்பன் வினோத் உள்ளிட்ட பல மலையாள நடிகர்கள் நடித்துள்ளனர்.  

இந்தப் படத்தை பிருத்விராஜின் பிருத்விராஜ் புரொடக்சன்ஸ் மற்றும் மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ராஜேஷ் முருகேசன் இந்தப் படத்துக்கு இசையமைக்க, ஆனந்த் சி சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். டிசம்பர் மாதம் 1ஆம் நாள் திரையரங்கில் வெளியானது. முதல்நாள் மலையாளத்தில் மட்டுமே ரிலீஸ் ஆனது. அடுத்தநாள் தமிழிலும் வெளியானது.  

கோல்டு படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரத்தொடங்கியது. இது குறித்து இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் தனது முகநூல் அதிரடியாக கருத்து கூறியிருந்தார். தற்போது மீண்டும் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அதில் கூறியதாவது: 

நான் உண்மையாகவே மணீஷ் நாராயணன், பரத்வாஜ் ரங்கன், ப்ளூசட்டை மாறன் விமர்சனங்களுக்கு காத்திருக்கிறேன். என்னுடைய உழைப்பிற்கு இவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.