விஜய்யின் 67 படத்தின் பூஜை சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் இன்று நடைபெற்றுள்ளது.
நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. இந்தப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிப்பார் என ஏற்கனவே தகவல் வெளியானது. தற்போது இந்தத் தகவல் உறுதியாகியுள்ளது.
இதையும் படிக்க- கதையில் மாற்றம்: வணங்கான் படத்தில் இருந்து விலகினார் சூர்யா
லலித் குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய்யின் 67வது படத்தின் பூஜை சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் இன்று நடைபெற்றுள்ளது. மேலும் விஜய் 67 பட அறிவிப்பு டீசர் படப்பிடிப்பிற்காக பிரசாத் லேப்பில் இரண்டு செட்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Lokesh kanagaraj At AVM Studio
To Going Thalapathy67 Poojai#ThalapathyVijay #Thalapathy67pooja #thalapathy67 pic.twitter.com/KclQd8eLaI
â Vijay (@actorjoseph1974) December 5, 2022
அதேசமயம் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தயாரிப்பு தரப்பு டிசம்பர் 31 ஆம் தேதி வெளியிடலாம் எனத் தெரிகிறது. விஜய் 67 படம் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் பின்னணியில் தயாராக உள்ளதால் விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் 2019ல் வெளியான மாஸ்டர் படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆக. 22-ல் திமுக செயற்குழுக் கூட்டம்!

தில்லி எய்ம்ஸில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா அனுமதி! ஆஞ்சியோ பரிசோதனை!
சுதந்திர தினம்: 15 காவல் அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கம்! தமிழக அரசு அறிவிப்பு!

திமுகவை தோற்கடித்த வாக்காளர்களுக்கு நல்ல சாவே வராது! சாபம் விடுகிறாரா ஆர்.எஸ். பாரதி?
விடியோக்கள்

எடப்பாடி பழனிசாமி Press Meet! | ADMK | Edappadi Palaniswami | EPS |



