சென்னையிலேயே இப்படி ஒரு அசம்பாவிதம்; இது முதல்வர் விஜய்யின் நிர்வாகத் திறமையின்மை! இபிஎஸ்தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை கோரி டிஜிபியிடம் திமுக புகார்!அரவிந்த் கேஜரிவாலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல்!அன்பில் மகேஸ் வழக்கு! முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாருக்கு 5 நாள்கள் போலீஸ் காவல்!மதுரை பிரபல நகைக் கடையில் 500 சவரன் கொள்ளை!9.5 சிஜிபிஏ மாணவர்களுக்கு திருப்பதியில் இலவச தரிசனம்! விநோத அறிவிப்பை வெளியிட்ட கல்லூரிபுதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து! 22 பயணிகள் காயம்!சட்டம் - ஒழுங்கு பிரச்னை! பண்டிகை நாள்களில் டாஸ்மாக் கடைகளை மூட முடிவு?ஜம்முவில் காணாமல்போன சிறப்பு காவல் அதிகாரிகள் சடலமாக மீட்பு!நாளை வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்!இன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு!சம்பா நெற்பயிா்க் காப்பீட்டு காலவரம்பு டிச. 1 வரை நீட்டிப்புஉபோ் செயலியில் இன்று ஆட்டோ, கால் டாக்ஸிகள் இயக்கப்படாது!

செந்தில் பாலாஜி மீதான வழக்கு; வழக்கை இழுத்தடிக்க அனுமதிக்க முடியாது: நீதிமன்றம் எச்சரிக்கை!

குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறித்து...

senthil balaji

செந்தில் பாலாஜி - கோப்புப் படம்

Updated On :

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிய மோசடி வழக்கை, இழுத்தடிக்கும் எந்த நடவடிக்கையையும் அனுமதிக்க முடியாது என குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2011-2015 ஆம் ஆண்டுகளில் நடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், போக்குவரத்துத் துறையின் பணி நியமனங்களை, பணம் பெற்றுக் கொண்டு நிரப்பியதாக மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கடந்த 2018-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இதில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 2,200-க்கும் மேற்பட்டோருக்கு எதிராக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் அனைத்தும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி என்.லோகேஷ்வரன் முன் இன்று (நவ. 12) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், வழக்கில் இருந்து விடுவிக்க கோரி, ஒவ்வொருவரும் அடுத்தடுத்து வழக்கு தாக்கல் செய்வதை ஏற்க முடியாது என்றும், குறிப்பிட்ட காலத்துக்குள் அனைவரும் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், எப்போது மனுத் தாக்கல் செய்யப்படும் என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும், தேவையின்றி வழக்கை இழுத்தடிக்கும் எந்த நடவடிக்கையையும் அனுமதிக்க முடியாது என்றும், விருப்பம்போல, மனு தாக்கல் செய்வதாக இருந்தால், ஜாமீனை ரத்து செய்துவிடுவதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.

அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட குற்றம்சாட்டப்ப்டடவர்களிடம், வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி எப்போது மனு தாக்கல் செய்ய உள்ளீர்கள்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு, வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, விரைவில் மனு தாக்கல் செய்யவுள்ளதாக பதிலளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Summary

The special court has warned the accused that it will not tolerate any actions aimed at delaying the case involving fraud, in which they allegedly promised to secure jobs in the transport department.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.