சூப்பர் ஸ்டாரின் ‘பாபா’ திரைப்படத்திற்கான வெளிநாட்டு வெளியீட்டு உரிமத்தை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில், அவரே கதை, திரைக்கதை எழுதி தயாரித்து வெளியிட்ட படம் பாபா. இந்த படத்தை அண்ணாமலை, வீரா, பாட்ஷா படத்தை தொடர்ந்து நான்பாவது முறையாக சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார்.
ரஜினிக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலாவும், முக்கிய வேடங்களில் ரியாஸ் கான், கவுண்டமணி, தில்லி கணேஷ், சுஜாதாம் நம்பியார், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
பாபா படம் திரைக்கு வந்து 20 ஆண்டுகளான நிலையில், மீண்டும் மறு படத்தொகுப்பு செய்யப்பட்டு, நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு படத்தை புதுப்பொழிவுடன் மேம்படுத்தியுள்ளனர்.
இதையும் படிக்க | ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்த சீரியல்? இயக்குநர் கொடுத்த தகவல்
பாபா படத்தின் புதிய டிரைலர் மீண்டும் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வரும் நிலையில், ரஜினியின் பிறந்த நாளையொட்டி டிசம்பர் 10-ஆம் தேதி திரைக்கு வருகின்றது.
இதற்கான டிக்கெட் முன்பதிவு சில திரையரங்குகளில் தொடங்கிய சில நிமிடங்களிலேயே காலை 4 மணி காட்சிக்கான டிக்கெட்டுகள் முடிவடைந்துவிட்டது.
இதற்கிடையே, பாபா படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமத்தை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினாலும் கழுத்துக்கு ஆபத்து நேரிடக் கூடாது என்றால்!

முதல்முறையாக கனடியன் ஓபனில் பட்டம் வென்ற இகா ஸ்வியாடெக்!

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 14 - நேரலை!

மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆக. 22-ல் திமுக செயற்குழுக் கூட்டம்!
விடியோக்கள்

எடப்பாடி பழனிசாமி Press Meet! | ADMK | Edappadi Palaniswami | EPS |


