
லதா ரஜினிகாந்த்
கொட்டும் மழையில் காத்திருந்த ரசிகர்களுக்கு, ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்தார்.
இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 73-ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ரஜினிகாந்த்திற்கு வாழ்த்து தெரிவிக்க அவரது ரசிகர்கள் கொட்டும் மழையிலும் போயஸ்கார்டனில் உள்ள வீட்டின்முன்பு திரண்டனர்.
இந்நிலையிலும் லதா ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது," ரஜினிகாந்த் ஊரில் இல்லை, அவர் ஊரில் இருந்திருந்தால் ரசிகர்களை சந்தித்து இருப்பார். அவர் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மழையில் யாரும் காத்திருக்க வேண்டாம்". என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து ரசிகர்கள் கலைந்து சென்றனர். ரஜினிகாந்த் எங்கு சென்று இருக்கிறார் என்ற தகவலை அவரது மனைவி லதா ரஜினிகாந்த் வெளியிடவில்லை.
இதையும் படிக்க: உலகக் கோப்பை தோல்வி: ரொனால்டோ உருக்கம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளுக்கு அரசியர் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...