நகராட்சி துறை பணி நியமன முறைகேடு! கே.என். நேருவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!அன்பில் மகேஸுக்கு நவ. 4 வரை போலீஸ் காவல் தவெக ஆட்சியில் புதைக்கப்பட்ட தமிழ்நாட்டின் வளர்ச்சி: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு!உண்மையைப் பேசுவதில் அரிச்சந்திரனுக்கே டஃப் கொடுக்கும் தவெக ஆட்சி! அப்படி என்னதான் சொன்னார்கள்?சோப்ளாங்கி என்றால் என்ன அர்த்தம்? வைரலாகும் வார்த்தை!முரசு புயல் எச்சரிக்கை! சென்னையில் கடல் சீற்றம்; அலைகள் 2.1 மீ. உயரம் எழும்!சென்னைக்கு 180 கி.மீ. தொலைவில் முரசு தீவிரப் புயல்! எங்கே, எப்போது கரையைக் கடக்கும்?முரசு புயல் எங்கே இருக்கிறது? சென்னைக்கு ஜாக்பாட் அடிக்குமா?

”இதனால் தான் அவரைப் பிடிக்கும்..” லோகேஷ் கனகராஜ் குறித்து கமல்ஹாசன்

லோகேஷ் கனகராஜ் குறித்து கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

Updated On :

லோகேஷ் கனகராஜ் குறித்து கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரூ.400 கோடி அளவிற்கு பெரும் வசூல் சாதனையைப் படைத்தது.

ஓடிடியில் வெளியானாலும் தமிழைத் தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கமல்ஹாசன், “விக்ரம் திரைப்படத்திற்கு முன் வேறு கதையில் நடிக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால், அப்போது இருந்த சூழலில் ஒரு தயாரிப்பாளாராக நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. லோகேஷிடம் உங்கள் கதையை மேலோட்டமாக சொல்லுங்கள் என்றேன். அவர் விக்ரம் படத்தின் யோசனையை சொன்னார். அது திரைக்கதை அல்ல. ஒரு ஐடியாதான். அந்த ஐடியா எனக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. தன் பாணியில் புதிய யோசனையால் வெற்றி பெற்றார். இதனால் தான் லோகேஷ் கனகராஜ்-யை பிடிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.