
துணிவு படத்தில் நடிகர் அஜித்குமாரின் கதாபாத்திரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
இதையும் படிக்க: ’வியக்க வைக்கும் பிரம்மாண்டம். ஆனால்..’ அவதார் -2 | திரைவிமர்சனம்
2023, பொங்கல் அன்று இப்படம் திரைக்கு வருகிறது.
இந்நிலையில், துணிவு படத்தில் நடிகர் அஜித் வில்லனாக நடித்துள்ளதாக இயக்குநர் வினோத் தெரிவித்துள்ளார்.
நாயகனாக இல்லாமல் முழுக்க முழுக்க நெகட்டிங் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம் அஜித்!
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...