‘சூரரைப் போற்று’ இயக்குநர் வாங்கிய முதல் கார்: ராசியான எண் 6? 

சூரரைப் போற்று இயக்குநர் சுதா கொங்கரா புதிய கார் ஒன்றினை வாங்கியுள்ளார்.
‘சூரரைப் போற்று’ இயக்குநர் வாங்கிய முதல் கார்: ராசியான எண் 6? 

தொடர் தோல்விகளில் இருந்த நடிகர் சூர்யாவுக்கு 2020ல் சூரரைப் போற்று, 2021 ஆம் ஆண்டு ஜெய் பீம் என அடுத்தடுத்து இரண்டு வெற்றிகள் கிடைத்தன. இதனை நடிகர் சூர்யாவும் சமீபத்தில் ஒரு விருது விழாவில் பகிர்ந்து, இயக்குநர் சுதா கொங்கராவுக்கு நன்றி தெரிவிக்க, அதனைக் கேட்ட சுதா கண் கலங்கினார். சூரரைப் போற்று திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த படம், சிறந்த திரைக்கதை என 5 தேசிய விருதுகளை வென்றது. 

இந்நிலையில் சூரரைப் போற்று இயக்குநர் சுதா கொங்கரா புதிய கார் ஒன்றினை வாங்கியுள்ளார். இந்த காரில் அவருக்கு மிகவும் பிடித்தமான சூர்யா, ஜி.வி.பிரகாஷ் உடன் ஜாலியாக ஒரு பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் தனது குரு இயக்குநர் மணிரத்னமிடம் ஆசிர்வாதம் வாங்கியுள்ளார். 

சுதா கொங்கராவுக்கு பிடித்த அல்லது ராசியான எண் 6ஆக இருக்கும் போலிருக்கிறது. அதனால்தான் அந்த எண்ணிலே காரின் நம்பர் பிளேட்டினை  வாங்கியுள்ளதாக தெரிகிறது. 

கே.ஜி.எஃப். தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் அடுத்த படத்தின் முன் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதை முடித்து அடுத்து விரைவில் சூர்யாவுடன் இணைய உள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com