
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் விபத்தில் சிக்கியுள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் காயங்களுடன் பதிவிட்டதற்கு மக்கள் பலரும் விரைவில் குணமடைய வேண்டும் என ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் முத்தழகு. வார நாள்களில் பிற்பகல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவி வருகிறது.
இந்த தொடரில் கதாநாயகனாக நடித்திருந்த மூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் ஆஷிஷ் சர்க்கரவர்த்தி நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.
படிக்க | சீரியலிலிருந்து விலகுகிறேன்: 'பாக்கியலட்சுமி' நடிகை திவ்யா கணேஷ்
சமூக வலைதளங்களில் அவ்வபோது புகைப்படங்களையும், விடியோக்களையும் பதிவிட்டு வரும் இவர், வெளியிட்டிருந்த சமீபத்திய பதிவில் அரசுப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது விபத்தில் சிக்கியதைப் பகிர்ந்துள்ளார்.
பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென பேருந்து விபத்தில் சிக்கியதாகவும், அந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக நானும் என்னுடன் விபத்தில் மற்ற பயணிகளும் சிறு சிறு காயங்களுடன் தப்பித்து விட்டோம். கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் எனக் குறிப்பிட்டு, காயங்களையும் பதிவிட்டுள்ளார்.
இதற்கு ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். விரைவில் குணமடைந்து மீண்டும் நடிக்கச் செல்ல வேண்டும் என ஆறுதல்கள் குவிந்து வருகின்றன.