
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இலங்கையைச் சேர்ந்தவர்களாக லாஸ்லியா, ஜனனி ஆகியோர் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தனர்.
இருவருமே ஊடகத் துறையில் பணியாற்றி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா கலந்துகொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா ஆர்மிக்கு பிறகு லாஸ்லியாவுக்கு தீவிரமான ஆர்மி உருவானது. பிக்பாஸ் நிகழச்சிக்கு பிறகு லாஸ்லியா திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.
படிக்க | கதறி அழுத அஷீமை கட்டியணைத்த விக்ரமன்! பிக் பாஸில் என்ன நடந்தது?
அதேபோன்று, இலங்கையைச் சேர்ந்த ஜனனி பிக்பாஸ் சீசன் 6-ல் பங்குபெற்றார். ஊடகத் துறையில் நெறியாளராக இருந்த ஜனனி, இந்த சீசனின் லாஸ்லியாவாக இருப்பார் என பலரிடையே எதிர்பார்ப்பு நிலவியது.
எனினும் அவர், இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவை விட ஜனனி அதிக ஊதியம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
படிக்க | ''கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை''.. 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சித்ராவின் தாயார் உருக்கம்!
பிக்பாஸ் சீசன் 6-ல் ஜனனிக்கு ஒரு நாளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியமாக வரையறுக்கப்பட்டது. அவர் 70 நாள்கள் தங்கியிருந்த நிலையில், ரூ.17 லட்சத்துக்கு மேல் ஊதியம் வழங்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
லாஸ்லியாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக ரூ.5 லட்சம் ஊதியமாக வழங்கப்பட்டது.