அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

’விஜய் 67’ வில்லனாகும் பிரபல நடிகர்!

விஜய் 67 படத்தில் வில்லனாக நடிக்க வைக்க பிரபல நடிகரிடம் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 11:10 am

DIN

விஜய் 67 படத்தில் வில்லனாக நடிக்க வைக்க பிரபல நடிகரிடம் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்குப் பின் விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் இணைய உள்ளார். ‘விக்ரம்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இந்த படம் உருவாகவுள்ளதால் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

முன்னதாக, விஜய் நடிக்கும் 67வது படத்திற்கு வில்லனாக முதலில் நடிகர் பிருத்விராஜ் தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. பின்னர் அவர் தேதி பிரச்னையில் விலகியதால் நடிகர் விஷால் இணைந்துள்ளதாக பேசப்பட்டது.

Story image

தற்போது, விஷாலுக்குப் பதிலாக நடிகர் அர்ஜூன் விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ளதாகவும் சம்பளமாக ரூ.4 கோடி பேசப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அர்ஜூன் ’இரும்புத்திரை’ படத்தில் வில்லனாக சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.