
வாரிசு இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பு குறித்து சன் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24-ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ராஷ்மிகா மந்தனா, ஷாம் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில், அனிருத் பாடிய பாடல் உள்பட படத்தின் அனைத்து பாடல்களும் வெளியிடப்பட்டது. இதில், நடிகர் விஜய் ரசிகர்கள் மத்தியில் பேசிய விடியோக்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றது.
இதையும் படிக்க | புகைப்படத்துடன் காதலரை வாழ்த்திய பிரபல நடிகை!
வாரிசு இசை வெளியீட்டு விழாவின் உரிமத்தை கைப்பற்றிய சன் நிறுவனம் நேரடியாக ஒளிபரப்பாததால் படத்தின் பாடல்களும் இன்னும் வெளிவரவில்லை.
இந்நிலையில், ஆங்கில புத்தாண்டான ஜனவரி 1 மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் வாரிசு இசைவெளியீட்டு விழா ஒளிபரப்பப்படும் என்று சன் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், இசை வெளியீட்டு விழாவின் ப்ரோமோவையும் சன் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.
உங்கள் நெஞ்சில் குடியிருக்கும் தளபதி விஜய்யின் "வாரிசு" திரைப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா..
— Sun TV (@SunTV) December 26, 2022
ஜனவரி 1 மாலை 6.30 மணிக்கு உங்கள் சன் டி.வி.யில் காணத்தவறாதீர்கள்..
Stay Tuned Nanba and Nanbis..#SunTV #VarisuAudioLaunchOnSunTV #ThalapathyVijay #Varisu pic.twitter.com/q35kjqtIss