பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது காதலரின் புகைப்படத்தை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல், ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். நடிகர் சூர்யா, கார்த்தி உள்ளிட்டோருடன் நடித்து தமிழில் பிரபலமானவர் ரகுல் ப்ரீத் சிங்.
இவர் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2, சிவகார்த்திகேயனுடன் அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஜக்னி பக்னானியை காதலிப்பதாக இன்ஸ்டாகிராமில் ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்திருந்தார். திரிஷா நடிப்பில் வெளியான மோகினி படத்தில் ஜக்னி பக்னானி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜக்னி பக்னானி பிறந்தநாளையொட்டி, இன்ஸ்டாகிராமில் இருவரும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரகுல் ப்ரீத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“சாண்டா எனது வாழ்க்கையின் சிறந்த பரிசைக் கொடுத்துள்ளார். அது நீ தான். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். என் வாழ்வில் மகிழ்ச்சியையும், அமைதியையும் நிரப்பியதற்கு நன்றி. என் அமைதிக்கான காரணமாக இருந்ததற்கு நன்றி. நீ விரும்பும் அனைத்தையும் வெல்ல விரும்புகிறேன். எப்போதும் சிரித்துக் கொண்டே இருங்கள்” எனப் பதிவிட்டிருந்தார்.
இதையும் படிக்க | பிக் பாஸில் தனலட்சுமி பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ரகுல் ப்ரீத் சிங் பதிவிட்ட புகைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவிரியில் 18,000 கன அடி நீர்வரத்து! ஒகேனக்கலில் பரிசல்கள் இயக்க தடை

உதயநிதி கைதுக்கு முன் காவல்துறையினருடன் நடந்த வாக்குவாதம்! | DMK | TVK

உதயநிதி கைது! திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்டு கைதான அன்பில் மகேஷ்!

உதயநிதி ஸ்டாலின் வீட்டைச் சுற்றி போலீஸார் குவிப்பு!
விடியோக்கள்

உதயநிதி ஸ்டாலின் கைது! பரபரப்பான நிமிடங்கள்! | TVK | DMK


