தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

இயக்குநர் ராம் - நிவின் பாலியின் படப்பிடிப்பில் மிஷ்கின்: வைரலாகும் புகைப்படங்கள்

இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் இயக்குநர் மிஷ்கின் கலந்துகொண்டார். 

Published On :

இயக்குநர் ராம் நீண்ட இடைவேளைக்கு பிறகு மலையாள நடிகர் நிவின் பாலி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். மாநாடு படத்துக்கு பிறகு இந்தப் படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். 

இந்தப் படத்தில் நடிகை அஞ்சலி நாயகியாக நடக்க, நடிகர் சூரி ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில் இந்தப் படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது துவங்கியது. 

இந்த நிலையில் இயக்குநர் மிஷ்கின் நட்பு ரீதியாக படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அப்போது நிவின் பாலி, சூரி, இயக்குநர் ராம், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியுடன் மிஷ்கின் இருக்கும் புகைப்படங்களை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ளார். 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சூரி, இன்று இனியதொரு தொடக்கம். இயக்குநர் அண்ணன் ராம், சகோதரர் நிவின் பாலியுடன் முதன்முறையாக பயணிப்பதில் மகிழ்ச்சி. அண்ணன் சுரேஷ் காமாட்சிக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். 

நடிகர் நிவின் பாலி தனது ட்விட்டர் பக்கத்தில், இயக்குநர் ராமின் படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு துவங்கியது. சூரியுடன் நடிக்கிறேன். ராம் இயக்கத்தில் நடிப்பது மிகச் சிறந்த கற்றல் அனுபவமாக இருக்கிறது. என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.