தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

’ராதே ஷ்யாம்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராதே ஷ்யாம்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

News image
Updated On :7 பிப்ரவரி 2022, 11:47 am

DIN

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராதே ஷ்யாம்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு நடிகர் பிரபாஸ் நடிக்கும் படங்களுக்கு இந்திய அளவில் வரவேற்பு இருக்கிறது.

இந்நிலையில், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில்  பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராதே ஷ்யாம். இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். 

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. இதில் தென்னிந்திய மொழிகளுக்கு மட்டும் ஐஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இருந்து ஏற்கனவே யுவன் பாடிய பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

தற்போது, இப்படம் வருகிற மார்ச் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதேபோல் எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பெரும் பொருட்செலவில்  உருவான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் மார்ச்-25 ஆம் தேதி வெளியாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.